யாழில் துப்பாக்கிச்சுட்டுக்கு இலக்காகி இராணுவ அதிகாரி படுகாயம்!
யாழில் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட இராணுவ அதிகாரி ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் யாழ். சாவகச்சேரி தம்பு தோட்டத்தில் அமைந்துள்ள 523 ஆவது இராணுவப் படைப்பிரிவு முகாமில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் இன்று(28) காலை 6 மணி அளவில் குறித்த இராணுவ அதிகாரி தன்னைத் தானே சுட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
படுகாயம் அடைந்த அதிகாரி
குருநாகல் பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய எச்.எம்.டபிள்யூ.பீ. பண்டார என்ற அதிகாரியே படுகாயமடைந்தவராவார்.

வயிற்றுப் பகுதியில் படுகாயம் அடைந்த இராணுவ அதிகாரி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் துப்பாக்கி சூட்டுக்கான காரணம் அறியப்படாத நிலையில் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |