கொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை வீட்டுக்கு கொண்டு சென்ற உறவினர்கள்! தேடி வந்த அதிகாரிகள்
corona
sri lanka
ratnapura
death
people
By Shalini
இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்த பெண்ணின் உடலை இரவோடு இரவாக எரித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
குருவிட்ட பாதகம பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் வேறு ஒரு நோய் காரணமாக இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு இருந்தார்.
இவருக்கு கொரோனா பரிசோதனைcz செய்யப்பட்டு முடிவு வருவதற்குள் அவர் உயிரிழந்துவிட்டார்.
இந்த பரிசோதனையில் குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இதையடுத்து உயிரிழந்தவரின் உடலை தும்மல்கொட பகுதியிலுள்ள வீட்டுக்கு உறவினர்கள் கொண்டு சென்றுள்ளனர்.
உடல் கொண்டு செல்லப்பட்டு சில மணி நேரங்களுக்குள்ளேயே வீட்டிற்கு சென்ற பொலிஸ் மற்றும் சுகாதார அதிகாரிகள் சடலத்தை ஒரே இரவில் தகனம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்