முரண்பாடான யோசனைகளுடன் புதிய பாதீடு : ரவி குமுதேஷ் ஆதங்கம்
சுகாதார ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகள் சம்பந்தமாக வரவு - செலவுத்திட்டத்தில் தீர்வுகள் இல்லை என சுகாதார தொழில் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் (Ravi Kumudesh) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ரவி குமுதேஷ் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அரச சேவையின் செயற்றிறனை அதிகரிப்பது சம்பந்தமாக வரவு செலவுத்திட்டத்திற்குள் முன்வைக்கப்பட்டுள்ள சில யோசனைகள் முரணானவை.
ஓய்வுபெறும் வயது 65 வரை அதிகரிக்கப்பட்டுள்ளதன் மூலம் வழமையாக ஓய்வுபெறுவோருக்கு 10 ஆண்டுகளுக்கான ஓய்வூதியம் கிடைக்காது போகும் அடையாளங்கள் தென்படுகின்றன.
ரணுக்கோவின் அரச ஊழியர்களுக்கான ஊதிய பரிந்துரைகள் மூடி மறைக்கப்பட்டுள்ளன.
கொரோனா சட்டத்தை கொரோனா கட்டுப்பாடு என்ற பெயரில் அதிகளவில் பயன்படுத்த ஆரம்பித்தால், ஆர்ப்பாட்டங்களுக்கு பதிலாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட நேரிடும்“ என எச்சரித்துள்ளார்.