கோலி,ரோகித்தை தொடர்ந்து மற்றுமொரு இந்திய வீரரும் ஓய்வு
சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக இந்திய (India) அணி வீரர் ரவீந்திர ஜடேஜா (Ravindra Singh Jadeja) அறிவித்துள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேய ஜடேஜா இதனை தெரிவித்துள்ளார்
மேலும் தனது பதிவில், "நன்றி. நிறைந்த இதயத்துடன், சர்வதேச ரி20 போட்டிகளில் இருந்து விடைபெறுகிறேன். உறுதியான குதிரை பெருமையுடன் பாய்வது போல, நான் எப்பொழுதும் என் நாட்டுக்காக என்னால் முடிந்ததைக் கொடுத்துள்ளேன்.
வாழ்க்கையின் உச்சம்
ரி20 உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவு நனவாகியுள்ளது. இது எனது சர்வதேச ரி20 கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சம். நினைவுகளுக்கும், வாழ்த்துகளுக்கும், தளராத ஆதரவுக்கும் நன்றி. ஜெய் ஹிந்த்" என்று குறிப்பிட்டுள்ளார்.
எனினும், ரி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றாலும், ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடப் போவதாக அறிவித்துள்ளார்.
மேலும், முன்னதாக இந்திய வீரர்கள் ரோகித் சர்மா (Rohit Sharma), விராட் கோலி (Virat Kohli) சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததை தொடர்ந்து தற்போது ஜடேஜாவும் ஓய்வு முடிவை அறிவித்துள்ளமை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
