கனடிய இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் வன்முறை சம்பவங்கள் : காவல்துறையினர் விடுத்துள்ள எச்சரிக்கை
கனடிய இளைஞர்கள் மத்தியில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக கனடிய காவல்துறையினர் தெரிவிக்கையில்,
“கடும்போக்குவாத வன்முறைகளும், இணையம் ஊடான வெறுப்புணர்வு வன்முறைகளும் தற்போது இளைஞர்களிடையே அதிகரித்துள்ளது.
அடிப்படைவாத கோட்பாடுகள்
இளம் தலைமுறையினா அடிப்படைவாத கோட்பாடுகள் குறித்து நாட்டம் காட்டுவது ஆபத்தான ஒன்றாகும்.” என குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், தீவிரவாத சம்பவங்கள் தொடர்பில் இரண்டு இளைஞர்களை காவல்துறையினரால் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளனர், கைது செய்யப்பட்ட இருவரும் யூத இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும், ஐந்து மாத காலப் பகுதியில் தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்களில் ஐந்து கனடிய இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
எனவே, இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபட வேண்டாம் என யூத மதத் தலைவர்கள் இளைஞர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |