தத்தெடுத்த ஐந்து வயது சிறுமி சித்திரவதை : விரிவுரையாளர் கைது
தத்தெடுத்த ஐந்து வயது சிறுமியை சித்திரவதை செய்த விரிவுரையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ருஹுணு பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் விரிவுரையாளரே மாத்தறை சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது தத்தெடுக்கப்பட்ட சிறுமி, விரிவுரையாளரால் கொடூரமாக நடத்தப்பட்டது தெரியவந்துள்ளது.
வன்புணர்வு செய்ததாக
குறித்த விரிவுரையாளர் சிறுமியை தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து வன்புணர்வு செய்ததாக கடந்த வெள்ளிக்கிழமை காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி, அன்றைய தினம் சிறுமியை காவல்துறை காவலில் எடுத்து தடயவியல் அதிகாரியிடம் முற்படுத்தப்பட்டார். மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிறுமி கொடுமை மற்றும் பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளாகியிருப்பது தெரியவந்தது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |