உயர்தரம் உள்ளிட்ட மேலும் சில வகுப்புக்களை மீள ஆரம்பிக்க தீர்மானம்
covid
schools
re start
By Vanan
எதிர்வரும் நவம்பர் 8ஆம் திகதி முதல் மேலும் சில வகுப்புக்களுக்கான கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதன்படி10, 11, 12 மற்றும் 13 ஆகிய தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.
முன்னதாக, நவம்பர் 16 முதல் க.பொ.த சாதாரண மற்றும் உயர்தர மாணவர்களுக்கு 50 சதவீத மாணவர் கொள்ளளவுடன் பிரத்தியேக வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியது.
இந்த நிலையில் தரம் 10 முதல் 13 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.