எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு தயார் - முன்னாள் அரசதலைவர்
எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு தயாராகவுள்ளதாக சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் முன்னாள், அரசதலைவர் மைத்ரிபால சிறிசேன(-Maithripala-Sirisena) அறிவித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் நேற்று (27) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
சிறிலங்கா சுதந்திர கட்சி எதிர்வரும் ஆண்டு ஆரம்பத்தில் நடைபெறவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் மாகாணசபைத் தேர்தலை இலக்கு வைத்து கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் தேர்தல் தொகுதிகள் ஊடாக போட்டியிடும் வேட்பாளர் தெரிவு இடம்பெறுகிறது என குறிப்பிட்டார்.
நேர்முகத் தேர்வின் ஊடாக தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என முன்னாள் அரசதலைவர் மைத்ரிபால சிறிசேன (-Maithripala-Sirisena)கூறியுள்ளார்.