மக்களுக்கு பேரதிர்ச்சி - 500 ரூபாவாக அதிகரிக்கப்போகும் அரிசி விலைகள்
Food Shortages
Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Food Crisis
By Sumithiran
அரிசியின் விலை 500 ரூபா
எதிர்வரும் காலங்களில் ஒரு கிலோ அரிசியின் விலையை 500 ரூபாவாக அதிகரிக்க முன்னணி அரிசி ஆலை உரிமையாளர்கள் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆலைகளின் உரிமையாளர்கள் ஏற்கனவே அரிசி விற்பனையை சுமார் 40 சதவீதம் குறைத்துள்ளனர்.
அரிசி இருப்பு இல்லை
சமீப நாட்களாக அரிசி இருப்பு இல்லை என பல முக்கிய நகரங்களில் உள்ள அரிசி வியாபாரிகள் கூறுகின்றனர். உள்ளூர் அரிசியின் விலை ஏற்கனவே 250 ரூபாவாக உள்ளதாகவும், இம்மாத இறுதிக்குள் 300 ரூபாவாக உயரும் எனவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே பொருட்களின் விலை அதிகரிப்பால் திண்டாடும் மக்கள் அரிசியின் விலை இவ்வாறு பாரியளவில் அதிகரித்தால் மேலும் பல கஷ்ரங்களை எதிர்நோக்குவர் என தெரிவிக்கப்படுகிறது.
