துப்பாக்கி வழங்குமாறு கோரும் சாவகச்சேரி உபதவிசாளர்
Jaffna
Sri Lankan Peoples
Dr.Archuna Chavakachcheri
By Kajinthan
தென்மராட்சியில் குரங்குத் தொல்லையினை கட்டுப்படுத்தும் நோக்கில் சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட சனசமூக நிலையங்களுக்கு வாயுத் துப்பாக்கிகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கோரிக்கையை நேற்று நடைபெற்ற மாதாந்த அமர்வில் நகராட்சி மன்ற உபதவிசாளர் ஞா.கிஷோர் முன் வைத்துள்ளார்.
உடனடியாக துப்பாக்கிகள் கொள்வனவு
உபதவிசாளரினால் கடந்த சபை அமர்வில் முன்வைத்த பிரேரணையின் பிரகாரம் குரங்கு தொல்லையினை கட்டுப்படுத்து நகராட்சி மன்ற நிதி மூலம் இயங்கு நிலையில் உள்ள சனசமூக நிலையங்களுக்கு வாயுத் துப்பாக்கிகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளார்.
இந்த கோரிக்கையை அனைத்து சபை உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டதையடுத்து சபை நிதியில் இருந்து உடனடியாக துப்பாக்கிகள் கொள்வனவு செய்வது என ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி