சிறிலங்கா அதிபரினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி
Ranil Wickremesinghe
Sri Lanka
New Gazette
By Dharu
அத்தியாவசிய சேவைகளாக முத்துறைகளின் சேவைகளை பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதனை அதிபர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ளார். 1979ஆம் ஆண்டின் இல 61இன் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2ஆவது பிரிவின்படி அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகள் பெப்ரவரி 17ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் குறித்த வர்த்தமானியின் படி, மின்சாரம், பெட்ரோலியம், எரிபொருள் விநியோகம் என்பன அத்தியாவசிய சேவைகளாக்கப்பட்டுள்ளன.
அத்தியாவசிய சேவை
மேலும் வைத்தியசாலைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் நோயாளிகளின் பராமரிப்பு இல்லங்கள் மற்றும் சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.


தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம் சப்பறத் திருவிழா

2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி