முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அநுர விடுத்த அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட அனைத்து உத்தியோகபூர்வ இல்லங்களையும் அரசாங்கம் மீளப்பெறும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) அறிவித்துள்ளார்.
களுத்துறை - கட்டுகுருந்தவில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
வாடகை
இதன்போது மேலும் தெரிவித்த ஜனாதிபதி, “முன்னாள் ஜனாதிபதிகளுக்கு உத்தியோகபூர்வ குடியிருப்புகளை விட்டு வெளியேறவோ அல்லது வாடகையை தாங்களாகவே செலுத்தவோ விருப்பம் உள்ளது.
இந்த நிலையில், தற்போதுள்ள சட்டங்களின்படி, முன்னாள் ஜனாதிபதிகள் ஒரு இல்லத்தையோ அல்லது அவர்களின் சம்பளத்தில் 1/3 பெற உரிமை உண்டு.
கட்டுப்படுத்தப்படும் நிவாரணம்
இதன்படி, அரசாங்கம் தற்போது இந்த நிவாரணத்தை ரூ. 30,000 கொடுப்பனவாக கட்டுப்படுத்தும், இது அவர்களின் சம்பளத்தில் 1/3 ஆகும்.” என்றார்.
இவ்வாறனதொரு பின்னணியில், கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகை, கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகை தவிர அனைத்து அமைச்சர் பங்களாக்களும் ஹோட்டல் திட்டங்கள் அல்லது பிற பொருத்தமான பயன்பாடுகளுக்காக மீண்டும் பயன்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |