தசுன் சானக்க முறியடித்த மஹேல மற்றும் சங்கக்காரவின் சாதனை - இந்தியா எதிர் இலங்கை டி20 போட்டி!
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டி20 போட்டி பூனேவில் நேற்று இடம்பெற்றிருந்தது.
குறித்த போட்டியில் இந்திய அணியை 16 ஓட்டங்களினால் இலங்கை அணி வீழ்த்தி மூன்று போட்டிகளை கொண்ட டி20 தொடரை 1-1 என சமநிலைப்படுத்தியுள்ளது.
குறித்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இலங்கை அணியின் தலைவர் தசுன் சானக்க துடுப்பாட்டத்தில் அரைச்சதம் விளாசியதோடு, பந்துவீச்சில் இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றியிருந்தார்.
தசுன் சானக்க முறியடித்த சாதனை
இந்தியா அணியுடனான நேற்றைய போட்டியில் இலங்கை அணியின் தலைவர் தசுன் சானக்க அதிரடியாக விளையாடி 22 பந்துகளில் 6 ஆறு ஓட்டங்கள் மற்றும் 2 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 22 பந்துகளில் 56 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
நேற்றைய போட்டியில் 20 பந்தில் தசுன் சானக்க அடித்த அரைச்சதம் சாதனையாக மாறியுள்ளது.
டி20 போட்டிகளில் குறைவான பந்தில் இலங்கை வீரர் ஒருவர் அடித்த அரைச்சதம் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
பழைய சாதனை
இதற்கு முன்னர் இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களான மஹேல ஜெயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோரின் வசம் இந்த சாதனை இருந்தது.
இவர்கள் 21 பந்துகளில் அரைச்சதம் விளாசியிருந்தனர்.
துடுப்பாட்டம் மட்டுமல்லாது பந்துவீச்சிலும் கலக்கிய தசுன் ஒரு ஓவர் பந்துவீசி 4 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை கைப்பற்றியிருந்ததோடு, குறித்த போட்டியில் ஆட்டநாயகனாகவும் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
