வயலுக்குச் சென்ற விவசாயி சடலமாக மீட்பு!
body
recover
farmer
mulaitivu
By Vanan
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட குமுழமுனை ஆண்டான்குளம் பகுதியில் விவசாய நடவடிக்கைக்குச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முல்லைத்தீவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
36 அகவையுடைய பூதன்வயல் முள்ளியவளையினைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான வேலாயுதம் ரவிச்சந்திரன் என்ற விவசாயியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலத்தினை மீட்ட முல்லைத்தீவு காவல்துறையினர் சடலத்தினை முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு மரண விசாரணைக்காக எடுத்துச் சென்றுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றார்கள்.
பாம்பு தீண்டி குறித்த விவசாயி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.