குளத்திற்குள் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு..!
புத்தளம் - நெடுங்குளம் பகுதியில் ஆணொருவரின் சடலமொன்று நீரில் மிதந்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் இன்றைய தினம் (11.05.2023) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் தில்லையடி பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய ராமைய்யா நடேசன் என்பவரென அடையாளம் காணப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்ப்பில் தெரியவருவதாவது,
நீரில் மிதந்த சடலம்
இன்றைய தினம் காலை அப்பகுதியில் உள்ள ஒருவர் குளிக்கச் சென்றவளைக் குளக்கரையில் உடைகள் காணப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்களிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அப்பகுதி மக்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈட்ப்பட்டவேளை, நீரில் மிதந்த நிலையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, காவல்துறையினருக்குத் தவலை வழங்கியுள்ளனர்.
தகவலறிந்து சம்பவமிடத்திற்கு காவல்துறையினர் வருகை தந்ததோடு, திடீர் மரண விசாரணை அதிகாரி வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது திடீர் மரண விசாரணை அதிகாரி சடலத்தைப் பார்வையிட்ட பின்னர் வைத்தியசாலைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளார்.
