கிணற்றில் இருந்து வயோதிபரின் சடலம் மீட்பு - யாழில் சம்பவம்
Jaffna
Sri Lanka
Sri Lanka Police Investigation
Death
By pavan
அதிகாலையில் வீட்டில் இருந்து காணாமல்போன வயோதிபர் ஒருவர் தோட்ட கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் நேற்று (02) கலட்டி கரணவாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கலட்டி கரணவாய் கிழக்கை சேர்ந்த 80 வயது மதிக்கத்தக்க வயோதிபரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் காணாமல் போனதை அடுத்து அவரது உறவினர்களால் நெல்லியடி காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை

இந்த நிலையில் பிற்பகல் 2 மணியளவில் கரணவாய் பகுதியில் உள்ள கிணற்றில் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெல்லியடி காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி