மகிந்த ராஜபக்ச வித்தியாலயத்தில் வெடிப்பொருட்கள்: காவல்துறை வெளியிட்ட சந்தேகம்
மாத்தறை வெல்லமட மகிந்த ராஜபக்ச வித்தியாலயத்தின் பழைய கட்டிடத்தின் கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல வெடிப்பொருட்கள் காவல்துறையினால் மீட்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் குறித்த கட்டிடம் புனரமைக்கப்பட்ட போதே இந்த வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
பல வெடிபொருட்கள்
இதன்போது, வெளிநாட்டு தயாரிப்பு என சந்தேகிக்கப்படும் ரீ -56 ரக துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் 21 தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன், வேறு வகையான 136 தோட்டாக்கள் மற்றும் 2 டெட்டோனேட்டர்கள் உள்ளிட்ட பல வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் சாத்தியமான குற்றத்திற்காக பயன்படுத்தப்பட்டதா, ஒரு பிரமுகரை குறிவைத்து இருக்கலாம் அல்லது மாற்று நோக்கம் உள்ளதா என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்த பாடசாலை 2013 ஆம் ஆண்டு அப்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சவினால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.