மற்றுமொரு இந்திய மீனவர் சடலமாக மீட்பு
jaffna
body
recover
indian fisherman
By Vanan
கடல் சீற்றம் காரணமாக நடுக்கடலில் தவறி விழுந்த இந்திய மீனவரொருவரின் சடலம் காரைநகர் கடற்கரையில் இன்று (08) கரை ஒதுங்கியுள்ளது.
தமிழகத்தின் நாகை மாவட்டத்தில் இருந்து கடந்த 2ஆம் திகதி மூவர் மீன்பிடிக்க கடலுக்குள் சென்ற நிலையில், கடல் சீற்றம் காரணமாக படகிலிருந்து மீனவர் ஒருவர் கடலில்தவறி விழுந்து மாயமானார்.
மாயமான மீனவரை கடந்த 4 நாட்களாக சக மீனவர்கள் தேடிவந்த நிலையில், இன்று அவர் காரைநகர் கடற்கரையில் சடலமாக கரை ஒதுங்கினார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை அண்மையில், மற்றுமொரு இந்திய மீனவர் இலங்கை கடற்படையின் படகுடன் ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.