கொள்ளுப்பிட்டி கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு - தீவிர விசாரணையில் பொலிஸார்
Police
Colombo
SriLanka
Death Body
Kollupiti
By Chanakyan
கொழும்பு - கொள்ளுப்பிட்டி கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபர் அப்பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில் தனியார் பாதுகாப்பு பிரிவில் பணிபுரிந்து வந்த, மஸ்கெலிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி