மக்களே அவதானம் : வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட சிவப்பு எச்சரிக்கை
நாட்டில் நிலவும் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, சிலாபம் முதல் புத்தளம் வழியாக மன்னார் (Mannar) வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பரப்புகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என கடற்சார் சமூகம் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கும் வளிமண்டலவியல் அறிவுறித்தியுள்ளது.
பலத்த காற்று
இதெவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் இடைக்கிடையில் மணித்தியாலத்துக்கு 50 - 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் இடைக்கிடையில் மணிக்கு 30 - 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
பலத்த காற்றினால் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு, வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கோரியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
