குறைவடையும் சந்தை வட்டி விகிதங்கள்: மத்திய வங்கியின் ஆளுநர் வெளியிட்ட தகவல்
சந்தை வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கு மேலும் வாய்ப்புகள் இருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
சந்தை வாடிக்கையாளர்களுக்கு நிதி நிறுவனங்கள் வெகுவிரைவில் குறைப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இன்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, நிதி நிறுவனங்கள் அந்த பெறுமதிகளை குறைத்துள்ள போதிலும், இலங்கை மத்திய வங்கியின் வட்டிக்கு இணையான அளவு குறைக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
வட்டி விகிதம் அதிகரிப்பு
மேலும் அவர் கூறுகையில், "புதிதாக வழங்கப்படும் கடனுக்கான வட்டி விகிதம் குறைய வேண்டும். தற்போது வழங்கப்பட்ட கடன்களில் செய்ய வேண்டிய மாற்றம் மெதுவாக நடக்கிறது, அதை நாங்கள் கண்காணித்து வருகிறோம்.
அத்துடன், புதிதாக வழங்கப்படும் கடன்களில் வட்டி விகிதம் அதிகரிக்கும் வாய்ப்புக்கள் காணப்படுகிறது, ஆனால் அவ்வாறு நடக்கக் கூடாது” என கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |