சுவையிலும்... பண்பாட்டிலும்... சிறக்கும் றீ(ச்)ஷாவின் அட்சய பாத்திரம் உணவுத் திருவிழா ஆரம்பம்
உணவும், பண்பாடும், பாரம்பரியமும் ஒன்றிணையும் இனிய தருணத்தை உங்களுக்காக வழங்குகிறது றீ(ச்)ஷாவின் "அட்சய பாத்திரம்" உணவுத் திருவிழா இன்று கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.
இன்று முதல் (7) முதல் எதிர்வரும் 10 திகதிவரை வரை, தினமும் மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை, இயக்கச்சி றீ(ச்)ஷா வளாகத்தில் நடைபெறும் இந்த நிகழ்வில் , பாரம்பரிய உணவுகளின் சுவையை சுவைத்து மகிழ ஏற்பாட்டுக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
எமது கலாசாரத்தின் செழுமையையும் ஒரே இடத்தில் அனுபவிக்கும் அரிய வாய்ப்பாக அமையவுள்ள இந்த நிகழ்வில் யாழ்ப்பாணத்தின் தனித்துவமான பாரம்பரிய உணவுகளான ஒடியல் கூழ், நண்டுப் பிரட்டல், பிட்டு–சொதி, பனங்கிழங்கு பணியாரம் உள்ளிட்ட பல்வேறு சுவைமிகு உணவுகள் பார்வையாளர்களுக்காக சிறப்பாக தயாரிக்கப்படுகின்றன.

அது மட்டுமல்லாது, உலகத் தரம் வாய்ந்த சமையல் கலைஞர்களின் நேரடி சமையல் நிகழ்ச்சிகள், பனை மற்றும் தென்னை சார்ந்த பாரம்பரிய சிற்றுண்டிகளின் சிறப்புக் காட்சி, சிறுவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் பாரம்பரிய சிற்றுண்டிப் போட்டிகள், மேலும் எமது பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் பறைசாற்றும் கலை மற்றும் கலாசார நிகழ்ச்சிகளும் தினமும் நடைபெறவுள்ளன.
Qick Food, IBC தமிழ், LANKASRI ஆகியன அனுசரணை வழங்கும் இந்த நிகழ்வில் சுவையான உணவுகளை ருசிப்பதற்காக மட்டுமல்ல, எமது பாரம்பரியத்தை அடுத்த தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் குடும்ப விழாவாகவும் இந்நிகழ்வு அமையவுள்ளது.
உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் தவறாமல் கலந்து கொண்டு, பாரம்பரிய சுவைகளின் இனிய அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.
மேலும் தகவல்களுக்கு: 077 777 2353, 077 777 2354
றீ(ச்)ஷாவின் "அட்சய பாத்திரம்" உணவுத் திருவிழா இது பாரம்பரிய சுவைகளும், பண்பாட்டு பெருமையும் சங்கமிக்கும் மகத்தான விழா...