றீச்ஷாவின் மாபெரும் மரதன் ஓட்டப் போட்டி...! வழங்கி வைக்கப்பட்ட பரிசில்கள்
Kilinochchi
Reecha
Sports
By Shalini Balachandran
கிளிநொச்சி - இயக்கச்சியில் உள்ள றீச்ஷா (ReeCha) ஒருங்கிணைந்த பண்ணையின் மாபெரும் மரதன் ஓட்டப் போட்டி சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.
கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற இப்போட்டி ஆண்கள் மற்றும் பெண்களுக்கு எனத் தனித்தனியாக இரு பிரிவுகளில் இடம்பெற்றது.
இதனடிப்படையில் இளம் வீரர், வீராங்கனைகளின் திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இப்போட்டியில் பங்குபற்றியவர்களுக்கு பெறுமதியான பணப்பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.
பரிசளிப்பு விழா
வெற்றிபெற்றவர்களுக்கு முதலாம் பரிசாக ரூபா 50,000, இரண்டாம் பரிசாக ரூபா 25,000 மற்றும் மூன்றாம் பரிசாக ரூபா 10,000 வழங்கப்பட்டதுடன் 10 ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.

இளம் வீரர்களின் திறமை போட்டியின் ஊடாக வெளிகொணரப்பட்டதுடன் பரிசளிப்பு விழாவும் சிறப்புற நடைபெற்று முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |









31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்