ஒரு பிரம்மாண்டமான சுவைப்பயணத்திற்குத் தயாராகும் கிளிநொச்சி மண்
கிளிநொச்சி மண் இதுவரை கண்டிராத ஒரு பிரம்மாண்டமான சுவைப்பயணத்திற்குத் தயாராகிவிட்டது.
ஈழத் தமிழர்களின் பாரம்பரிய உணவு முறைகளையும், ஆரோக்கிய வாழ்வியலையும் உலகிற்குப் பறைசாற்றும் நோக்குடன் " றீ(ச்)ஷாவின் அட்சய பாத்திரம் உணவுத் திருவிழா" இயக்கச்சி றீ(ச்)ஷா வளாகத்தில் லங்காசிறி , IBC தமிழ் , Quick Food ஆகிய நிறுவனங்களின் அனுசரணையுடன் கோலாகலமாக அரங்கேறுகிறது.
இன்று முதல் ஆரம்பமாகும் இந்த நிகழ்வு 2026 ஆகஸ்ட் 8, 9, 10 மாலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை கடந்த கால நினைவுகளையும், நம் மூதாதையரின் "உணவே மருந்து என்ற தத்துவத்தையும் புதுப்பிக்கும் ஒரு உன்னத நிகழ்வாகவும் இது அமையவுள்ளது.

லண்டன், கனடா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா என உலகெங்கும் வாழும் ஈழத் தமிழ் உறவுகள், தங்கள் மண்ணின் சுவையைத் தேடி ஒன்றிணையும் ஒரு உணர்வுப்பூர்வமான திருவிழா இது கடந்த ஆண்டு காணப்பட்ட நிலையில் இந்த ஆண்டும் அதனை விடவும் சிறப்பான ஏற்பாடுகளை றீ(ச்)ஷா வடிவமைத்துள்ளது.
உள்நாட்டு சமையல் ஜாம்பவான்களுடன், சர்வதேச தரம் வாய்ந்த சமையல் கலைஞர்களும் இணைந்து சமையல் கலைகளில் புதிய உத்திகளைப் புகுத்தவுள்ளனர்.
ஒடியல் கூழ், காரசாரமான நண்டுப் பிரட்டல், சுடச்சுட பிட்டு-சொதி, மற்றும் பாரம்பரிய பனங்கிழங்கு பணியாரம் என அள்ள அள்ளக் குறையாத சுவை வகைகள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன.
உலகத்தரம் வாய்ந்த சமையல் கலைஞர்கள் உங்கள் கண்முன்னே சமைக்கும் நேரடி செய்முறை விளக்கங்கள்.
எமது வாழ்வாதாரமான பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து தயாரிக்கப்படும் தனித்துவமான சிற்றுண்டிகளுக்கான பிரத்தியேக பகுதி.
அடுத்த தலைமுறைக்கு எமது பாரம்பரிய உணவுகளைக் கொண்டு சேர்க்கும் நோக்கில் நடத்தப்படும் சிற்றுண்டிப் போட்டிகள்.
சுவையோடு சேர்ந்து விழாவை இரசிக்க வைக்கும் எமது மண்ணின் பாரம்பரிய கலை மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் என்பன அரங்கேற காத்திருக்கின்றன.
இந்த மாபெரும் சுவைப்பாலத்தில் இணைந்து கொள்ள உங்கள் குடும்பத்தினருடன் இன்றே வருகை தாருங்கள்
தொடர்புகளுக்கு: 077 777 2353 | 077 777 2354