மாற்றத்தின் அடையாளமான றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையின் “காந்தள் பூங்கா”
றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையின் மற்றுமொரு முயற்சியாக காந்தள் பூங்கா என்ற மலர்சோலை உருவாக்கப்பட்டுள்ளது.
இங்கு ஏராளமான புதிய மரக்கன்றுகளும், பூச்செடிகளும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
றீ(ச்)ஷாவிற்கு வருகை தருவோர் இந்த இடத்தில் புகைப்படங்கள் எடுக்கலாம் எனலும் கூறப்பட்டுள்ளது.
கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்திபெற்ற பசுமை பண்ணையாக றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணை ( ReeCha Organic Farm) காணப்படுகின்றது.
சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பண்ணையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமான பல வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
இங்கு விடுதிகள், விளையாட்டு திடல்கள் மற்றும் கண்கவர் இடங்கள் அமைந்துள்ளதோடு தமிழர்களின் பண்பாடும் பாரம்பரியங்களும் மாறாத வகையில் பல்வேறு அம்சங்கள் காணப்படுகின்றன.
அந்தவகையில் றீ(ச்)ஷாவில் பல புதுப்புது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தற்போது காந்தள் பூங்கா அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விபரங்கள் காணொளியில்,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |