எரிபொருள் விலையை உயர்த்துவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு
நாட்டின் எரிபொருள் சந்தை பிரிக்கப்பட்டுள்ள விதத்திற்கு ஏற்ப, எரிபொருள் விலையை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபாக் நிறுவனங்கள் எடுத்துள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவு குறித்து இன்று (27) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போது அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
நாட்டின் டொலர் கையிருப்பைப் பாதுகாப்பதற்காக, முந்தைய அரசாங்கங்கள் நாட்டின் எண்ணெய் சந்தையில் தங்களுக்குக் கூடுதல் பங்குகளை வழங்கியுள்ளதாகவும், அதன்படி, இந்த நேரத்தில் அரசாங்கம் ஒரு எண்ணெய் விலையை முன்மொழிந்தால், அந்த அதிகரித்த விலையை அரசாங்கமே ஏற்க வேண்டியிருக்கும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்
மத்திய கிழக்கில் எரிபொருள் விலைகள் வேகமாக உயர்ந்து வரும் வேளையில், அந்த நிறுவனங்கள் எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தியுள்ளன, ஆனால் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தன்னால் இயன்றவரை எரிபொருளைத் தொடர்ந்து விநியோகித்து வருகிறது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பில் தொடர்ந்தும் பேசிய அமைச்சர், ''இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு தற்போது எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் இல்லாத இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அந்த இடங்களில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களை அமைக்க அரசாங்கம் தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறது. எண்ணெய் நிறுவனம் மூலம் சில சலுகைகளை வழங்குவதன் மூலம், சந்தை சரிந்துவிடாமல் மக்களுக்கு எண்ணெய் விநியோகிக்கும் திறன் எங்களுக்கு உள்ளது; அதைத்தான் நாங்கள் இப்போது செய்து கொண்டிருக்கிறோம்.
ஆனால், இந்தச் சந்தை பிரிக்கப்பட்டுள்ள விதத்தின் காரணமாக எண்ணெய் நிறுவனங்கள் இந்தச் சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எண்ணெய் நிறுவனத்திற்கு எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் இல்லாத சில இடங்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.
எண்ணெய் நிறுவனத்திற்கு எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் இல்லாத அந்த இடங்களில் கிடங்குகளை அமைப்பதே இப்போது எங்கள் இலக்கு. இந்த மானியத்தின் மூலம் எண்ணெய் நிறுவனம் சிறந்த முறையில் எண்ணெயை விநியோகித்து வருகிறது. இதுதான் இப்போது எங்களால் செய்யக்கூடிய நிலைமை." என கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |