கோட்டை நீதவான் நீதிமன்ற பதிவாளர் கைது
By Sumithiran
போலி ஆவணங்களை தயாரித்தமை மற்றும் பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்ற பதிவாளரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
அவர் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கோட்டை நீதவான் திலின கமகே செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
போலியான ஆவணம் தயாரித்தமை
பயணத்தடையின் கீழ் இருந்த சந்தேக நபர் ஒருவர் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக குடிவரவு அதிகாரிகளிடம் போலியான ஆவணங்களை தயாரித்தமை உட்பட பல குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
மரண அறிவித்தல்