சுற்றுலாதாரியாக வந்த வெளிநாட்டு பிரஜை கைது
Sri Lanka Police
Sri Lanka
Sri Lanka Magistrate Court
Maldives
Money
By Sumithiran
சுற்றுலாதாரியாக வந்து கட்டுநாயக்க பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
32 வயதுடைய மாலைதீவைச் சேர்ந்த பிரஜையே கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பாரிய பண மோசடி
ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டஇவரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்