நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களின் நீதிமன்ற தீர்ப்பு : விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான (Local Government Election) நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
அதன்படி, வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் அந்த மனுக்கள் மற்றும் வழக்குத் தீர்ப்புக்களின் பிரதிகளைக் குறித்த மாவட்டத்தின் மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்திற்கு வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காகத் தாக்கல் செய்யப்பட்ட சில வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தன.

விடுதலைப் புலிகளின் தலைவரை விமர்சித்த கருணா : போராளிகளின் வளர்ச்சி விருப்பமில்லை என்று குற்றச்சாட்டு
நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்
நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக நீதி கோரி பல கட்சிகள் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தன.
அந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை மீள ஏற்றுக்கொள்ளுமாறு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையிலேயே வேட்பு மனுக்கள் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால், மனுக்கள் மற்றும் வழக்குத் தீர்ப்புக்களின் பிரதிகளைக் குறித்த மாவட்டத்தின் மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்திற்கு வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
