யாழில் நிராகரிக்கப்பட்ட பல வேட்புமனுக்கள் : கட்சிகளுக்கிடையே பதற்றம்
யாழ் (Jaffna) மாநகர சபை உட்பட பல இடங்களில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் (Suresh Premachandran) தெரிவித்துள்ளார்.
தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை பரிசீலனை செய்யும் நடவடிக்கைகள் இன்று (20) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளன.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்
. இது தொடர்பாக அவர் மேலம் தெரிவிக்கையில், “யாழில் மட்டுமல்ல பெரும்பாலான பகுதிகளில் தமது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையாளர் தான் வரும்பியப்படி நேரத்திற்கு நேரம் எல்லாவற்றையும் மாற்றி கொண்டு இருக்க முடியாது.
தேர்தல் தொடர்பில் அறிவிக்கப்பட்டதையடுத்து புதிய விதிகளை முன்வைக்கும் நேரத்தில், அதற்கிடையில் நாங்கள் பல வேலைகளை செய்து விட்டோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்