மேற்குலகிற்கு புடின், ஜின்பிங் முக்கிய செய்தி
மேற்குலக நாடுகள் உருவாக்கும் அனைத்து நெருக்கடிகளையும் ரஷ்யா - சீனாவுக்கு இடையிலான கூட்டாண்மை உறவு முறியடிக்கும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
இன்று சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் நடத்திய மெய்நிகர் வழி சந்திப்பு மற்றும் பேச்சுகளின் போது இந்த விடயத்தை தெரிவித்த அவர் மேற்குலக நாடுகளிடம் இருந்து அழுத்தங்களும் ஆத்திரமூட்டல்களும் வெளிவந்தாலும் அவற்றை முறியடிப்பதில் ரஷ்யாவும் சீனாவும் முன்னெப்போதையும் விட திடசங்கற்பம் பூண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேற்குலகின் நெருக்கடி
அத்துடன் அடுத்த ஆண்டில் சீன அதிபர் ரஷ்யாவுக்கு விஜயம் செய்யவேண்டும் என்ற கோரிக்கையையும் புடின் முன்வைத்துள்ளார்.
உக்ரைனுடனான போர் காரணமாக சர்வதேச நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்ததோடு, ரஷ்யாவின் எரிபொருள் ஏற்றுமதியையும் தடை செய்தன.
இந்தச் சூழலில் ரஷ்யாவிடம் இருந்து சீனா தற்போது அதிக அளவில் எரிபொருள் இறக்குமதி செய்து வருகின்றது.
இதே சமகாலத்தில் உக்ரைனின் பல நகரங்களில் ரஷ்ய படைகள் ஏவுகணைத் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன.
இந்த நிலையில் இன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு இடையிலான காணொளி பேச்சுக்கள் இடம்பெற்றன.
சீன - ரஷ்ய ஒன்றிணைவு
இந்தப் பேச்சுக்களில் இரு நாடுகளும் தமது ஆயுதப் படைகளுக்கு இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பேசப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சீன - ரஷ்ய ஒன்றிணைவு குறித்து சீனா தனது மகிழ்ச்சியையும், எதிர்கால திட்டங்கள் குறித்த எதிர்வுகூறல்களையும் தெரிவித்துள்ளது.
சீனாவும் ரஷ்யாவும் ஒன்றிணைந்தால் உலக வளர்ச்சியின் முக்கிய
விடயமாக அமையும் என இந்தப் பேச்சுக்களின் போது சீன அதிபர் ஜி ஜின்பிங்
வலியுறுத்தியுள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
