அமெரிக்காவிற்கு சென்று உண்மையை உரைக்கத்தயார் : காணாமற் போனவர்களின் உறவுகள் உருக்கம்

Missing Persons Vavuniya SL Protest
By Sumithiran Jan 14, 2025 10:28 AM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

அமெரிக்க நிர்வாகம் எங்களை அழைத்தால், வொஷிங்டனுக்குச் சென்று, காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகள், அரசியல் கைதிகள் மற்றும் நிலையான, பாதுகாக்கப்பட்ட, சுதந்திரமான, இறையாண்மையுள்ள தமிழர் தாயகத்தின் தேவை குறித்து விவாதித்து முடிவெடுக்கத் தயாராக உள்ளோம் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்தனர்.

 வவுனியாவில் பிரதான தபாலகத்திற்கருகாமையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பொங்கல் நாளான இன்று(14) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தனர்.

வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட இப் போராட்டத்தின் பின் தொடரந்தும் கருத்து தெரிவித்த சங்கத்தின் செயலாளர் கோ. ராஜ்குமார்,

அறுவடையில் முக்கிய பங்காற்றிய மழை, கால்நடைகள் மற்றும் பூமிக்கு விவசாயிகள் நன்றி தெரிவிக்கின்றனர். இந்த இனிய தருணத்தில் அனைவருக்கும் தைப் பொங்கல் நல்வாழ்த்துக்களை தாய்மார்கள் தெரிவித்துக் கொள்கிறார்கள் . தமிழர்களுக்கு இந்த மகத்தான நாளில், 2025 ஆங்கில புத்தாண்டையும் வரவேற்கிறோம்.

இலங்கையில் அரிசித் தட்டுப்பாட்டால் திண்டாடும் மக்கள்

இலங்கையில் அரிசித் தட்டுப்பாட்டால் திண்டாடும் மக்கள்

தைரியமான தாய்மார்களின் நீதிக்கான போராட்டம்

எவ்வாறாயினும், இந்த நாள் ஒரு சோகமான மைல்கல்லையும் குறிக்கிறது: தமிழ் தாய்மார்கள் தங்கள் காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளை மீண்டும் பெறும்வரை இடைவிடாத போராட்டத்தின் 2886 ஆம் நாள் இன்று. வவுனியா நீதிமன்றத்திற்கு முன்பாக ஏ-9 வீதியில் நிற்கும் இந்த தைரியமான தாய்மார்கள் சத்தியம் மற்றும் நீதிக்கான கோரிக்கையை தொடர்ந்தும் முன்வைக்கின்றனர். தங்களின் அன்புக்குரியவர்களை வெளிக்கொணர்வதும், எதிர்கால இனப்படுகொலைகளைத் தடுப்பதும், தமிழர் இறையாண்மைக்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சர்வதேச ஆதரவைப் பெறுவதும் தாய்மாரின் நோக்கம்.

 சுதந்திர உலகின் தலைவர் டொனால்ட் டிரம்ப்

நவம்பர் தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப்பை(donald trump) வாழ்த்ததுகிறோம். "அவன் இல்லாமல் ஒரு அணுவும் அசையாது" என்பது பழைய தமிழ் பழமொழி. அதேபோல், அமெரிக்கா மற்றும் அதன் ஜனாதிபதியின் தலைமை இல்லாமல், உலகம் அரசியல் ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ நகர முடியாது. மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், சுதந்திர உலகின் தலைவர் டொனால்ட் டிரம்ப். அவரது வரவிருக்கும் காலத்தில், அமெரிக்காவின் தீர்க்கமான நடவடிக்கைகளால் உந்தப்பட்ட வெளியுறவுக் கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

அமெரிக்காவிற்கு சென்று உண்மையை உரைக்கத்தயார் : காணாமற் போனவர்களின் உறவுகள் உருக்கம் | Relatives Of Missing Persons Protest In Vavuniya

உதாரணமாக, பனாமா கால்வாய், கிரீன்லாந்து மற்றும் கனடா தொடர்பான டிரம்பின் கடந்தமாத அறிக்கைகள், அவரது கவனம் இலங்கை உட்பட தெற்காசியாவை நோக்கி விரைவில் திரும்பக்கூடும் என்று நம்மை சிந்திக்க வைக்கிறது.

முல்லைத்தீவு மருத்துவமனையில் பணியாற்ற மறுக்கும் மனநல மருத்துவர் : மருத்துவ சங்கங்கள் கவலை

முல்லைத்தீவு மருத்துவமனையில் பணியாற்ற மறுக்கும் மனநல மருத்துவர் : மருத்துவ சங்கங்கள் கவலை

சீனாவிற்கு எதிரான நிலைப்பாட்டில் தெளிவாக உள்ள அமெரிக்கா 

உலகில் வளர்ந்து வரும் சீனாவின்(china) ஆதிக்கத்திற்கு எதிரான தனது நிலைப்பாட்டில் அமெரிக்கா (us)தெளிவாக உள்ளது. சீனாவுக்கான ஆதரவு வெளிப்படையாகத் தெரிந்த இடங்களில், அரசியல் அல்லது கட்டமைப்பு மாற்றங்கள் பின்பற்றப்படலாம்.

அமெரிக்காவிற்கு சென்று உண்மையை உரைக்கத்தயார் : காணாமற் போனவர்களின் உறவுகள் உருக்கம் | Relatives Of Missing Persons Protest In Vavuniya

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை தமிழர்களாகிய நாம் வரவேற்கின்றோம். அவரது நிர்வாகம் எங்களை அழைத்தால், வொஷிங்டனுக்குச் சென்று, காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகள், அரசியல் கைதிகள் மற்றும் நிலையான, பாதுகாக்கப்பட்ட, சுதந்திரமான, இறையாண்மையுள்ள தமிழர் தாயகத்தின் தேவை குறித்து விவாதித்து முடிவெடுக்கத் தயாராக உள்ளோம் என்றார். 

தமிழர் பகுதியில் வெளிநாட்டிலிருந்து வந்த நபருக்கு நேர்ந்த துயரம்!

தமிழர் பகுதியில் வெளிநாட்டிலிருந்து வந்த நபருக்கு நேர்ந்த துயரம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

13 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Lausanne, Switzerland

28 Jan, 2024
மரண அறிவித்தல்

உடுத்துறை, வவுனியா, London, United Kingdom

29 Dec, 2024
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, மெல்போன், Australia

13 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Scarborough, Canada, Markham, Canada

09 Jan, 2025
மரண அறிவித்தல்

பூநகரி, கொழும்புத்துறை, புதுக்குடியிருப்பு

09 Jan, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில், தமிழ்நாடு, India, பரிஸ், France, Neuss, Germany

06 Jan, 2023
மரண அறிவித்தல்

வேலணை, திருநெல்வேலி

14 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வண்ணார்பண்ணை, பொலிகண்டி, London, United Kingdom

13 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கனடா, Canada

14 Jan, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மானிப்பாய், Dubai, United Arab Emirates, கனடா, Canada

14 Jan, 2021
மரண அறிவித்தல்

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, முல்லைத்தீவு, India, பிரான்ஸ், France

14 Jan, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

11 Feb, 2020
மரண அறிவித்தல்

உடுவில், சுவிஸ், Switzerland, London, United Kingdom

11 Jan, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், கொழும்பு, Reutlingen, Germany, Ravensburg, Germany, London, United Kingdom, சென்னை, India

16 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 1ம் வட்டாரம்,, Scarborough, Canada

10 Jan, 2023
மரண அறிவித்தல்

சில்லாலை, வெள்ளவத்தை, London, United Kingdom

02 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, திருகோணமலை

14 Jan, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பரிஸ், France

14 Jan, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

விடத்தற்பளை, நுணாவில் கிழக்கு, கொழும்பு

13 Jan, 2020
33ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

21 Dec, 1991
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், யாழ்ப்பாணம், கோயிலாக்கண்டி, Sevran, France

06 Jan, 2023