யாழில் உள்ளக விளையாட்டரங்கு அமைப்பு : ஆளும்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பம் அம்பலம்
யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டரங்கை அமைக்கின்ற விவகாரத்தில் ஆளும்கட்சிக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டிருக்கின்றமை இன்றைக்கு அம்பலமாகியுள்ளது.
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் யாழ் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று(14) நடைபெற்றது. இக் கூட்டத்தின் போதே விளையாட்டரங்கு அமைப்பது தொடர்பில் பேசுகையில் உட்கட்சி விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் விளையாட்டரங்கு அமைக்கும் பணிகள் எந்தக் கட்டத்தில் இருப்பதாகவும் இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை என்ன செய்யப் போகிறீர்கள் என கூட்டத்தை தலைமை தாங்கி நடாத்திய அமைச்சர் சந்திரசேகரிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
இளங்குமரன் எம்.பியின் திடீர் கேள்வி
இதன்போது குறுக்கிட்ட ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் யாரும் எதிர்பாரத வகையில் இந்த விளையாட்டரங்கு அமைப்பதற்கான இடத்தை தெரிவு செய்தது முதல் இதற்கான அனுமதியை யார் வழங்கியது எனப் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார்.

இதனை சற்றும் எதிர்பாராத அமைச்சர் சந்திரசேகரன் நாடாளுமன்ற உறுப்பினர் விளங்காமல் கதைக்க கூடாது என்றும் கொஞ்சம் இருங்க தம்பி என்றும் நான் சொல்வதை கேளுங்கள் என உரத்த தொனியில் பேசியிருந்தார்.
இதன் போது மீளவும் குறுக்கிட்ட அர்ச்சுனா, இளங்குமரன், ரஜீவன் ஆகிய மூன்று எம்பிக்களும் மாறி மாறி இதற்கான அனுமதி பெறப்பட்டதா? இத்திட்டத்திற்கு ஒதுக்கிய நிதி இன்னமும் இங்கே இருப்பதாகவும் அடுத்த கட்டம் என்ன என்ற தொனியில் பேசியிருந்தனர்.
அமைச்சர் சந்திரசேரின் திசை மாற்றல்
இந்த விளையாட்டரங்கு அமைப்பதற்கு ஏற்கனவே அடிக்கல் நாட்டப்பட்டிருந்த நிலையில் அதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கின்றது

இவ்வாறான நிலையில் தான் இத் திட்டம் தொடர்பில் ஆளுங்கட்சிக்குள் ஏற்பட்டிருக்கின்ற குழப்பங்கள் முரண்பாடுகள் இன்றைய கூட்டத்தினூடாக வெளிச்சத்திற்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும் இந்த விவகாரங்கள் தொடர்பில் தொடர்ந்து பேசுவதைத் தவிர்த்த அமைச்சர் சபையில் அடுத்த விடயத்தை எடுத்து கூட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்திருந்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |