சிங்கப்பூரில் தளர்த்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்
covid
relaxed
singapore
By Jaso
சிங்கப்பூரில் கொரோனா பரவல் குறைந்ததால் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
ஒக்டோபர் மாத இறுதியில், தினசரி கொரோனா பாதிப்புகள் 5000 க்கும் அதிகமாக இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக அந்த எண்ணிக்கை 2000 க்கு கீழ் வந்துள்ளது.
மேலும் சிங்கப்பூரில் 85 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு 2 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தற்போது உணவகங்களில் தடுப்பூசி செலுத்திய இருவர் மட்டுமே அருகருகே அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், திங்கட்கிழமை முதல் 5 பேர் வரை சேர்ந்து அமர்ந்து உணவருந்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.