6 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 30 ஆபிரிக்க பிரஜைகள் : நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

CID - Sri Lanka Police Colombo Sri Lanka Africa
By Sathangani Nov 24, 2023 10:00 AM GMT
Report

நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு 6 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 30 ஆபிரிக்க பிரஜைகளை விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

குறித்த 30பேரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு வெலிசர வெளிநாட்டு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களை விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்துமாறு சட்டமா அதிபரிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் வினவியது.

வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட பணம்: பயன் பெறும் 20 லட்சம் குடும்பங்கள்

வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட பணம்: பயன் பெறும் 20 லட்சம் குடும்பங்கள்


நீதவான் உத்தரவு 

இந்நிலையில் அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என சட்டமா அதிபரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற சமர்ப்பணங்களை கருத்திற்கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

6 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 30 ஆபிரிக்க பிரஜைகள் : நீதிமன்றம் வழங்கிய உத்தரவு | Release 30 African Nationals Detained For 6 Years

அத்துடன்  சந்தேகநபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை மீள ஒப்படைக்குமாறும், அவர்களின் வெளிநாட்டு பயணத்தடையை நீக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை குறித்த சந்தேக நபர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டு வெலிசர வெளிநாட்டு தடுப்பு முகாமில் 06 வருடங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த போதிலும் அவர்களுக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படவில்லை. 

ஒரு வாரத்திற்குள் கொலை செய்வேன்: மகிந்தவிற்கு விடுக்கப்பட்ட மிரட்டல்

ஒரு வாரத்திற்குள் கொலை செய்வேன்: மகிந்தவிற்கு விடுக்கப்பட்ட மிரட்டல்


குற்றப் புலனாய்வு திணைக்களம் 

சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ஷஷி குணவர்தன ”அது அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி எனவும், மேலும் இந்த சந்தேக நபர்களின் உணவுக்காக அரசாங்கம் மாதாந்தம் 20 இலட்சம் ரூபாவிற்கு மேல் செலவிட்டுள்ளதாகவும் அவர் நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

6 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 30 ஆபிரிக்க பிரஜைகள் : நீதிமன்றம் வழங்கிய உத்தரவு | Release 30 African Nationals Detained For 6 Years

இந்த சம்பவம் தொடர்பில் 2018 ஆம் ஆண்டு குற்றப் புலனாய்வு திணைக்களம் 34 ஆபிரிக்க பிரஜைகளை கைது செய்திருந்ததுடன், அவர்களில் நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் பணிப்புரை வழங்கியிருந்தது.

இதன்படி, சந்தேகநபர்கள் நால்வருக்கு எதிராக அடுத்த வருடம் மே மாதம் 16ஆம் திகதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு நீதவான்  உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் கோர விபத்து: ஒருவர் பலி

வவுனியாவில் கோர விபத்து: ஒருவர் பலி



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   



ReeCha
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026