ஹாங்காங்கில் ஜனநாயகத்தை ஆதரித்து செய்திகளை வெளியிட்ட இணைய பத்திரிகை : ஆசிரியர் உள்ளிட்ட 7 மூத்த பத்திரிகையாளர்கள் கைது
ஹாங்காங்கில் இணைய பத்திரிகை நிறுவனத்தின் ஆசிரியர் உள்ளிட்ட 7 மூத்த பத்திரிகையாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இது சர்வதேச அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் ஜனநாயகத்தை ஆதரித்து ஸ்டேண்ட் நியூஸ் (Stand News) என்ற இணைய பத்திரிகை செய்திகளையும், கட்டுரைகளையும் வெளியிட்டு வந்தது.
இதன் காரணமாக இந்த பத்திரிகை தேசவிரோத செயல்களில் ஈடுபடுவதாக ஹாங்காங் நிர்வாகம் கருதுகிறது. இதன்பேரில் அந்த இணைய பத்திரிகை நிறுவனத்தில் நேற்று முன்தினம் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அதிரடி சோதனைகள் நடத்தி அதன் ஆசிரியர் உள்ளிட்ட 7 மூத்த பத்திரிகையாளர்களை கைது செய்துள்ளனர்.
அமெரிக்கா, கைது செய்த பத்திரிகையாளர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று சீனாவையும், ஹாங்காங்கையும் கண்டித்துள்ளது. “ஸ்டேண்ட் நியூஸ் அலுவலகத்தில் ஹாங்காங் அரசு சார்பில் சோதனை நடத்தி அதன் மூத்த பணியாளர்கள் 7 பேரை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
இது அங்கு எஞ்சியிருக்கும் சுதந்திரமான ஊடகங்களின் செயல்பாடுகளை நிறுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளி உள்ளது" என
அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.