சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜன் - ஜனாதிபதிக்கு பறந்த மனு
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுதலை செய்வதற்கு தேவையான அரச தலையீட்டை மேற்கொள்ளுமாறு மலையக இந்து குருமார் ஒன்றியம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சிவராசா அனோஜனை விடுதலை செய்வதற்கு தேவையான அரச தலையீட்டை மேற்கொள்ளுமாறு கோரி, இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தினால் மனுவொன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.
அரச தலையீடு
இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் பொதுச்செயலாளர் சிவஸ்ரீ வேலு சுரேஷ் சர்மா குருக்களால் நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் குறித்த மனு கையளிக்கப்பட்டது.

சிவராசா அனோஜனை விடுவிப்பதற்கு தேவையான அரச தலையீடு ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க இதன்போது சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை அனோஜனின் குடும்பத்தினரை முக்கிய அரசியல் பிரதிநிதிகள் நேற்று (29) மாலை நேரில் சந்தித்து, அவர்களின் தற்போதைய நிலைமைகளைக் கேட்டறிந்து ஆறுதல் தெரிவித்துள்ளனர்.
சவுதி அரேபியாவில் தண்டனைக்கு உள்ளாகியுள்ள சிவராசா அனோஜன் மிக விரைவில் விடுதலையாகி தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைவதற்காக, சாத்தியமான அனைத்து சட்ட ரீதியான மற்றும் அரசாங்க மட்டத்திலான நடவடிக்கைகளையும் தொடர்ந்து முன்னெடுப்பதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |