யாழ். நகர மத்தியில் உடைந்து விழும் நிலையில் மேம்பாலம் - எடுக்கப்பட்ட தீர்மானம்
யாழ். மாநகரசபையின் ஆளுகைக்குட்பட்ட கஸ்தூரியார் வீதியில் உள்ள நவீன சந்தை கடைத் தொகுதிகiளை இணைக்கும் நீண்டகால மேம்பாலங்கள் இரண்டும் கடுமையாக சேதமடைந்துள்ளது.
அவ் வீதியூடாக போக்குவரத்து செய்பவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் எந்நேரத்திலும் உடைந்து விழக்கூடிய அபாயகரமான நிலையில் காணப்பட்டன.
முதல்வரின் உத்தரவு
அந்த வகையில் முதல்வரின் உத்தரவுக்கு அமைவாக மேம்பாலங்களின் நிலமைகளை ஆராய்வதற்காக நிபுணத்துவ பொறியியலாளரின் அறிக்கையை பெற்றுக் கொள்ளப்பட்டதுடன், அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சிபாரிசுகளின் அடிப்படையில் 2026.09.28 ஆம் திகதி மாரமத்துக்குழு மற்றும் நிதிக் குழு உறுப்பினர்களின் ஒருங்கிணைந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட ஒருமித்த தீர்மானத்திற்கு அமைவாக மேற்படி இரு மேம்பாலங்களையும் இடித்து அகற்றுவது என்று தீர்மானிக்கப்பட்டது.
மேற்படி கலந்துரையாடலில் பிரதி முதல்வர், மராமத்துக்குழு தலைவர், நிதிக்குழு உறுப்பினர்கள், மராமத்துக்குழு உறுப்பினர்கள், ஆணையாளர், பிரதம பொறியியலாளர், பிரதம கணக்காளர், கணக்காளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |