அதிகரிக்கப்பட்டது எரிபொருள் விலை
பெட்ரோலியக் கூட்டுத்தாபன எரிபொருள் விலைத் திருத்தம்
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (Ceypetco), இன்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலைத் திருத்தத்தை அறிவித்துள்ளது.
அதன்படி, Auto Diesel விலை லிட்டருக்கு ரூ. 10 அதிகரித்து ரூ. 392 ஆகவும், Super Diesel விலை லிட்டருக்கு ரூ. 50 அதிகரித்து ரூ. 528 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், Petrol 92 Octane விலை லிட்டருக்கு ரூ. 15 உயர்த்தப்பட்டு ரூ. 414 ஆகவும், Petrol 95 Octane விலை ரூ. 475 ஆகவே மாற்றமின்றியும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலை விபரம்
இதற்கிடையில், மண்ணெண்ணெய் விலையும் எந்த மாற்றமும் இன்றி ரூ. 285 என்ற அளவிலேயே காணப்படுவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

Auto டீசல் – ரூ. 392 (ரூ. 10 அதிகரிப்பு)
சூப்பர் டீசல் – ரூ. 528 (ரூ. 50 அதிகரிப்பு)
பெட்ரோல் 92 ஆக்டேன் – ரூ. 414 (ரூ. 15 அதிகரிப்பு)
பெட்ரோல் 95 ஆக்டேன் – மாற்றம் இல்லை
மண்ணெண்ணெய் – மாற்றம் இல்லை
லங்கா ஐ.ஓ.சியும் எரிபொருள் விலையை அதிகரித்தது
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளை உயர்த்தியதைத் தொடர்ந்து, லங்கா ஐ.ஓ.சி (IOC) நிறுவனமும் தனது எரிபொருள் விலைகளைத் திருத்தியுள்ளது.
அதற்கமைய, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் உயர்த்திய விலைகளுக்கு நிகராக அந்நிறுவனமும் தனது எரிபொருள் விலைகளை மாற்றி அமைத்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |