உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் விவகாரம்! ஹேமசிறி பெர்ணான்டோ விடுதலை
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை தவிர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ (Hemasiri Fernando) விடுவிக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹேமசிறி பெர்ணான்டோ மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களிலும் இருந்து, அவரை விடுவித்து விடுதலையாக்க விசேட மேல் நீதிமன்றம் தீர்மானித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
2019ஆம் அண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் பல இடங்களில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு பலர் உயிரிழந்தனர்.
இதனை தடுப்பதற்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் காவற்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ அனைத்து வழக்குகளிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.