ஆற்றில் நீராடச் சென்ற சிறுவன் மாயம்
ஆற்றில் நீராடச் சென்ற 15 வயதுச் சிறுவனொருவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார்.
கம்பளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல - உடோவிட்ட பகுதியில் மகாவலி ஆற்றில் நேற்று (22) மாலையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
வெலிகல்ல பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த மாணவன் தனது இரு நண்பர்களுடன் இணைந்து மகாவலி கங்கையின் தெனியேகல கடவைப் பகுதியில் நீராடிக் கொண்டிருந்த போதே சுழலில் சிக்கி நீரில் மூழ்கியுள்ளார்.

ஏனைய 2 சிறுவர்களும் எவ்வித ஆபத்துமின்றி பாதுகாப்பாகக் மீட்கப்பட்டுள்ளனர்.
கம்பளை காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்ட அவசரத் தகவலையடுத்து, காணாமல் போன சிறுவனைத் தேடும் விசேட மீட்புப் பணிகளும் மேலதிக விசாரணைகளும் கம்பளை காவல்துறையினரினால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இச்சம்பவம் தொடர்பில் கம்பளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 16 மணி நேரம் முன்