கொலைக் குற்றச்சாட்டு -மரணதண்டனை விதிக்கப்பட்ட சிறிலங்கா இராணுவ சிப்பாய் விடுதலை

Sri Lanka Army Attempted Murder Sri Lanka Magistrate Court
By Sumithiran Jun 06, 2023 12:40 AM GMT
Report

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் சிறிலங்கா இராணுவ சிப்பாயை விடுதலை செய்ய அனுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதிகள் ஏகமனதாக தீர்மானித்துள்ளனர்.

இவ்வாறு நிரபராதியாக விடுவிக்கப்பட்டவர், நொச்சியாகம, பஹமுனேகமவில் வசிக்கும் சிறிலங்கா இராணுவ பீரங்கி படைப்பிரிவின் முன்னாள் சிப்பாய் சேனக ஜயதிலக்க என்ற ஆனந்தா ஆவார்.

குற்றவாளிகளுக்கு மரண தண்டனை

கொலைக் குற்றச்சாட்டு -மரணதண்டனை விதிக்கப்பட்ட சிறிலங்கா இராணுவ சிப்பாய் விடுதலை | Release Sri Lanka Soldier Sentenced Death Murder

2004 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாட்களில் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தின் அதிகார எல்லைக்குட்பட்ட மஹவெலிதானவில் பியசேன மத்தும பண்டார என்ற நபரை கத்தியால் குத்திக் கொன்றதற்காக இலங்கை தண்டனைச் சட்டத்தின் கீழ் இந்த குற்றவாளிக்கு எதிராக சட்டமா அதிபர் அனுராதபுரம் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.

சட்டமா அதிபரினால் குற்றஞ்சாட்டப்பட்டவரிடம் மேலதிக குற்றப்பத்திரிகைகள் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, அன்றைய அனுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதியாக இருந்த சுனந்த குமார ரத்நாயக்க முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.

வழக்கு விசாரணையின் முடிவில், நபர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றத்துக்காக குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி சுனந்த குமார ரத்நாயக்க தீர்ப்பளித்தார்.

மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு 

கொலைக் குற்றச்சாட்டு -மரணதண்டனை விதிக்கப்பட்ட சிறிலங்கா இராணுவ சிப்பாய் விடுதலை | Release Sri Lanka Soldier Sentenced Death Murder

பின்னர், மரண தண்டனையை இரத்து செய்யுமாறு கோரி பிரதிவாதி மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்ததையடுத்து, மேன்முறையீட்டை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் குழாம், வழக்கை மீண்டும் ஆரம்பத்தில் இருந்து விசாரிக்குமாறு அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம், இந்த வழக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி சிந்தக சிறிநாத் குணசேகர முன்னிலையில் அழைக்கப்பட்ட போது, ​​குற்றம்சாட்டப்பட்டவர் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தரணி அரவிந்த ஹபக்கல, இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உயர்நீதிமன்ற நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி அரவிந்த ஹபக்கல விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதி, இந்த வழக்கை ஜூரி முன்னிலையில் பரிசீலிக்க நீதிமன்றத்தின் அனுமதியை வழங்கினார். அதன்படி, தொடர்ந்து ஐந்து நாட்கள் கூடிய உயர் நீதிமன்ற நீதிபதிகள், குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் இராணுவ வீரரை கொலைக் குற்றச்சாட்டில் இருந்து விடுவிப்பதற்கு ஏகமனதாக முடிவு செய்தனர்.

குற்றஞ்சாட்டப்பட்டவருக்காக சட்டத்தரணி சதுர தனஞ்சய ரணதுங்க, சிரேஷ்ட சட்டத்தரணி அரவிந்த ஹபக்கல ஆகியோருடன் முன்னிலையாகியிருந்தார். மேலும் வழக்குத் தொடருக்காக அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி துமிந்த அல்விஸ் முன்னிலையானார்.

அப்போது அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் நிபுணத்துவ சட்ட வைத்தியராக இருந்த தனஞ்சய வைத்தியரத்ன உட்பட 20 பேர் இந்த வழக்கில் சாட்சிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.

ReeCha
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019