நிறுத்தப்படும் ஓய்வூதியம்.... முன்னாள் எம்.பிக்களுக்கு நிவாரணம் : அமைச்சர் அறிவிப்பு

Parliament of Sri Lanka Money Harshana Nanayakkara
By Sathangani Feb 18, 2026 07:45 AM GMT
Report

நாடாளுமன்ற ஓய்வூதியம் நிறுத்தப்படுவதால் பாதிக்கப்படும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏதேனும் நிவாரணம் வழங்க முடியுமா என்பது குறித்து ஆராயப்படும் என அமைச்சர் ஹர்ஷன நாணாயக்கார (Harshana Nanayakkara) தெரிவித்துள்ளார்.

அதன்படி, பிரதேச செயலகங்கள் அல்லது பிற முறைகள் மூலம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தால் அரசாங்கம் இது குறித்து ஆராயும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.

சர்ச்சைக்குரிய ரில்வின் சில்வாவின் இந்திய விஜயம் : அரச தரப்பின் அறிவிப்பு

சர்ச்சைக்குரிய ரில்வின் சில்வாவின் இந்திய விஜயம் : அரச தரப்பின் அறிவிப்பு

ஓய்வூதியம் பெற்று வந்தவர்கள்

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை நாடாளுமன்றத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய உரிமையை இரத்து செய்யும் சட்டம் தற்போது உத்தியோகபூர்வமாக நிறைவேற்றப்பட்டு, நாட்டின் சட்டமாக மாறியுள்ளது.

நிறுத்தப்படும் ஓய்வூதியம்.... முன்னாள் எம்.பிக்களுக்கு நிவாரணம் : அமைச்சர் அறிவிப்பு | Relief For Former Mps In Case Of Financial Crisis

இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம், இனிவரும் காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படமாட்டாது.

தற்போது நாடாளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு எதிர்காலத்தில் ஓய்வூதியம் கிடைக்காது என்பதுடன், இதுவரை ஓய்வூதியம் பெற்று வந்தவர்களுக்கும் அதனைத் தொடர்ந்து பெறுவது தடை செய்யப்பட்டுள்ளது.

கிவுல் ஓயா திட்டமும் இன அழிப்பு நடவடிக்கை...இதனை நிறுத்துவது தமிழ் மக்களின் கூட்டுப் பொறுப்பாகும்..!

கிவுல் ஓயா திட்டமும் இன அழிப்பு நடவடிக்கை...இதனை நிறுத்துவது தமிழ் மக்களின் கூட்டுப் பொறுப்பாகும்..!

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனம்

ஐந்து வருடங்கள் மாத்திரம் சேவையாற்றிவிட்டு, எவ்வித நிதிப் பங்களிப்பும் இல்லாத ஓய்வூதியத்தைப் பெறுவதற்கு எதிராக நிலவிய பொதுமக்களின் எதிர்ப்பைக் கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிறுத்தப்படும் ஓய்வூதியம்.... முன்னாள் எம்.பிக்களுக்கு நிவாரணம் : அமைச்சர் அறிவிப்பு | Relief For Former Mps In Case Of Financial Crisis

இது தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு இணங்க அமைந்ததாகும். இந்தச் சட்டம் எவரையும் பழிவாங்கும் நோக்கம் கொண்டதல்ல, மாறாக ஒரு கொள்கை ரீதியான தீர்மானம்.

ஓய்வூதியம் நிறுத்தப்படுவதால் சில முன்னாள் உறுப்பினர்கள் பொருளாதார ரீதியாகச் சிரமப்படலாம் என்று எதிர்க்கட்சியினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அவ்வாறு கஷ்டப்படும் உறுப்பினர்கள் இருப்பின், அவர்கள் பிரதேச செயலகங்கள் அல்லது பிற முறைகள் மூலம் கோரிக்கை விடுத்தால், அரசாங்கம் அவர்களுக்கு ஏதேனும் நிவாரணம் வழங்க முடியுமா என்பது குறித்து ஆராயப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

வாகனங்களின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம் : வெளியான தகவல்

வாகனங்களின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம் : வெளியான தகவல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...



ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015