தங்காலையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்: இருவருக்கு விளக்கமறியல்!
தங்காலை, சீனிமோதர பிரதேசத்தில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த போதைப்பொருட்களை கரைக்கு கொண்டு வந்ததாகக் கூறப்படும் படகின் உரிமையாளரும், புவக்தண்டாவே சனா என்பவரும் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பாரியளவு போதைப்பொருள்
தங்காலை, சீனிமோதர பிரதேசத்தில் வைத்து பாரியளவு போதைப்பொருட்கள் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டன.
இதனையடுத்து, இதனுடன் தொடர்புடைய பலரும் தொடர்ந்தும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், குறித்த போதைப்பொருள் தொகை படகு மூலம் கொண்டு வரப்பட்டதாகவும், இது வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதன்படி, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரை விளக்கமறியலில் வைக்க இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
