செஞ்சோலை மாணவர் படுகொலை: உணர்வுபூர்வமாக இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வு
முல்லைத்தீவு (mullaitivu) செஞ்சோலையில் விமானத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் 18 வது ஆண்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது.
அஞ்சலி நிகழ்வொன்று இன்று (14.8.2024) வவுனியா (vavuniya) காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
போராட்ட கொட்டகை
முல்லைத்தீவு - வள்ளிபுனம், இடைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் 2006 ஆம் ஆண்டு தலைமைத்துவ பயிற்சிக்காக சென்றிருந்த மாணவர்கள் மீது சிறிலங்கா விமானப்படை நடத்திய தாக்குதலில் பாடசாலை மாணவர்கள் 53 பேர் உட்பட 61 பேர் உயிரிழந்தனர்.
வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்ட கொட்டகையில் இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் மரணமடைந்த மாணவர்களின் புகைப்படங்களுக்கு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதோடு மலர் அஞ்சலியும் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கலந்துகொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
தந்தை பிறப்பு சான்றிதழ் பெறச்சென்றவேளை : காசாவில் பிறந்து நான்கு நாட்களேயான இரட்டை குழந்தைகள் விமான குண்டுவீச்சில் பலி
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |