புலம்பெயர் தமிழ் உறவுகளிடம் டக்ளஸ் விடுத்துள்ள கோரிக்கை
புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடையை நீக்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்ட அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நன்றி தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதிபரின் இந்தத் தீர்மானத்தினை நல்லெண்ணச் சமிக்ஞையாக புலம்பெயர் தமிழ் உறவுகள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஈ.பி.டி.பியின் கோரிக்கை
தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கான ஆதரவினை எந்தவிதமான சஞ்சலமும் இன்றி துணிச்சலாக வெளிப்படுத்திய ஈ.பி.டி.பி. கட்சி, தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைுவேற்றும் வகையில் சுமார் 10 அம்சக் கோரிக்கை முன்வைத்திருந்தது.
அதில் ஒன்றாக புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் தடை நீக்கப்பட வேண்டும் என்பதும் உள்ளடக்கப்பட்டிருந்தது.
பொருளாதார பலத்தை கட்டியெழுப்ப உதவுதல்
தடை நீக்கப்பட்டுள்ள இந்தச் சந்தர்ப்பத்தினை புலம்பெயர் உறவுகள் சரியான சந்தர்ப்பமாக பயன்படுத்தி, நாட்டில் வாழ்ந்து வருகின்ற தங்களுடைய உறவுகளின் பொருளாதார பலத்தை கட்டியெழுப்புவதற்கு முன்வரவேண்டும்.
ஏனைய கோரிக்கைகளும் முன்னுரிமை அடிப்படையிலாயினும் நிறைவேற்றப்படுவதுடன், தடைசெய்யப்பட்டுள்ள முஸ்லிம் அமைப்புக்கள் தொடர்பாக ஆராய்ந்து நியாயமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிபரிடம் வலியுறுத்தியுள்ளார்.
புலம்பெயர் தமிழர்கள் தொடர்பில் ரணில் எடுத்த தீர்மானம்! பகிரங்க அறிவிப்பை வெளியிட்ட சிறிலங்கா அரசாங்கம் |