காவல்துறையினர் அகற்றிய கூடாரங்களை சட்டத்தரணிகளின் தலையீட்டுடன் மீள அமைத்த போராட்டக்காரர்கள்
protest
massive protest
galle face
srilankan economic crisis
GotaGoGama
tents are back
lawyers intervene
By Kanna
கோட்டா கோ கிராமத்தில் இன்று காலை காவல்துறையினரால் அகற்றப்பட்ட கூடாரங்கள் சட்டத்தரணிகள் குழுவொன்றின் தலையீட்டின் பின்னர் மீண்டும் அமைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு காலிமுகத்திடலில் அரச தலைவர் மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி நடத்தப்பட்டு வரும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி காலியில் மக்கள் போராட்டத்தை நடத்தி வந்ததுடன் அந்த இடத்திற்கு கோட்டா கோ கிராமம் என பெயரிட்டிருந்தனர்.
இதேவேளை, காவல்துறையினர் அந்த இடத்தில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை இன்று காலை உடைத்து அப்புறப்படுத்தி இருந்தனர்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அந்த இடத்தில் மிக நேர்த்தியான முறையில் சட்டத்தரணிகள் குழுவொன்றின் தலையீட்டுடன் மீண்டும் கூடாரங்களை அமைத்துள்ளனர்.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி