கறுப்பு பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட இலங்கைத் தமிழர்கள்
பயங்கரவாதம் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட இருவரின் பெயர்களை நீக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன இருவரின் பெயர்களையும் கறுப்புப் பட்டியலில் இருந்து உத்தியோகபூர்வமாக நீக்கி வர்த்தமானி அறிவித்தலை நேற்றைய தினம் (23) வெளியிட்டார்.
சிவப்பு பிடியாணை
கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் வவுனியா, வேப்பம்குளம், மரடவாடி மாவத்தையைச் சேர்ந்த ரமேஷ் என அழைக்கப்படும் நிக்லப்பிள்ளை ஆண்டனி எமில் லக்ஷ்மி காந்தன் மற்றும் யாழ்ப்பாணம் நல்லூர் கச்சேரி வீதியில் வசிக்கும் முருகேசு ஸ்ரீ சண்முகராஜா ஆகியோர் ஆவர்.
2010 ஜூலை 27 முதல் சர்வதேச காவல்துறையினரால் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த ரமேஷ், பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுவதால், 2014 முதல் தடுப்புப்பட்டியலில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.