தியாக திலீபன் சிலை அகற்றல் விவகாரம்! புலம்பெயர் மக்களின் கேள்விகளுக்கு நேரலையில் பதில்
யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் திருவுருவச் சிலையை காவல்துறையினர் அகற்றியமை தொடர்பில் பல தரப்பினரும் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
மேலும் குறித்த சிலையை நினைவிடத்தில் மீள வைக்கக்கோரி திலீபன் நினைவாலயத்தின் முன்பு நேற்று (30.) மாலை ஆரம்பமான அணையா விளக்கு போராட்டமானது, நாளை (02) மாலை வரை முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்நிலையில் சிலை அகற்றல் விவகாரம் தொடர்பில் புலம்பெயர் மக்களின் கேள்விகளுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் ஐ. பி. சி நேரலையில் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “மாவீரனுடைய இலட்சியம் அடையப்பட வேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பாக இருந்தது.
ஒரு இனத்தினுடைய விடுதலைக்காக ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடி வீரச்சாவு அடைந்தார் என்றால் வளர்ந்து வருகின்ற தலைமுறையினர் அந்த இலட்சியத்தை அடைய அர்ப்பணிப்போடு செயலாற்ற வேண்டுமே தவிர வன்முறையாக செயலாற்ற கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |