சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான தகவல்
தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட அனைவருக்கும் எதிர்வரும் செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதத்திற்குள் நிரந்தர சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என அறிவித்தல் வெளியாகி உள்ளது.
வெகுஜன ஊடக அமைச்சில் நேற்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் (Department of Motor Traffic) அனுருத்த வீரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆணையாளர் நாயகம் மேலும் கருத்து தெரிவிக்கையில், 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார பிரச்சினையால், சாரதி உரிம அட்டைகளுக்கு தேவையான அட்டைகளை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சாரதி அனுமதிப்பத்திரம்
இந்த சிக்கலால் கிட்டத்தட்ட 8 லட்சம் சாரதி உரிமங்கள் நிலுவையில் உள்ளதாக அனுருத்த வீரசிங்க (Anuruddha Weerasinghe) குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தற்போது தேவையான அட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், புதிய சாரதி உரிமம் மற்றும் புதுப்பித்தல்களுக்காக ஆண்டுக்கு 9 முதல் 10 லட்சம் சாரதி உரிமங்கள் அச்சிடப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சாரதி அனுமதிப்பத்திரத்தை கருப்புப் பட்டியலில் (Black List) இடும் முறையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, முதற்கட்ட மதிப்பீடுகள் இடம்பெற்று வருவதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |